Tamilnadu
'Quota-வுல நான் படிக்கல' : தினமும் வாய் கூசாமல் பொய் பேசும் அண்ணாமலை!
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நான் வாய் திறந்தாலே பொய் மட்டும்தான் பேசுவேன் என்பதைத் தினமும் நிரூபித்து வருகிறார். தற்போது தேர்தல் நேரம் என்பதால் வெட்கமே இல்லாமல் இஷ்டத்திற்குப் பொய் மூட்டைகளைக் கட்டவிழ்த்து வருகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கோவையில் 2 டிகிரி வெப்பம் அதிகரிப்பதற்குக் காரணம் திராவிட அரசுகள்தான் என்று பா.ஜ.க தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பேசி இருக்கிறார்.
இவர் இப்படி பேசியதை அடுத்து அண்ணாமலை மண்டைக்குள் கொஞ்சமாவது மூளை இருக்குமா? அல்லது களிமண்தான் இருக்கிறதா? என கோவை தொகுதி மக்களே கேள்விகளை கேட்கத் தொடங்கி விட்டனர்.
தற்போது மீண்டும் தனது பொய் மூட்டையிலிருந்து மற்றொரு பொய்யை வெளியே எடுத்துள்ளார். அது, இடது ஒதுக்கீட்டில் நான் படிக்கவில்லை என கூறி இருக்கிறார். ஆனால் உண்மை என்னவென்றால், 2010 ஆம் ஆண்டு IPS பணியில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டுப் பிரிவில் பணியில் சேர்ந்தவர்தான் இந்த அண்ணாமலை. இந்த உண்மையை மறைத்துத்தான் அண்ணாமலை தற்போது பொய் பேசி இருக்கிறார்.
Also Read
-
”பாஜகவின் ஊதுகுழலாக உள்ள பழனிசாமியை 2026ல் மக்கள் அடித்து விரட்டுவார்கள்” : அமைச்சர் ராஜேந்திரன் உறுதி!
-
மருத்துவ படிப்பில் சேர 72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?
-
”அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து கிடக்கும் எடப்பாடி பயனிசாமி” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?