Tamilnadu
”பா.ஜ.க போன்ற சில்லறை கட்சிகளுக்குப் பதிலளிக்க முடியாது” : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அதிரடி!
கோவை மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி தலைமையில் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கண்ணம் பாளையத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா," தி.மு.க கோவையில் அமோக வெற்றி பெரும். தி.மு.கவை எதிர்த்துப் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள்" என தெரிவித்தார்.
அப்போது, கோவையில் வெப்பம் அதிகமாக இருப்பதற்கு தி.மு.கதான் காரணம் என பா.ஜ.க தலைவர் கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, "பா.ஜ.க போன்ற சில்லறை கட்சிகளுக்குப் பதிலளிக்க எங்களுக்கு நேரமில்லை. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க குறித்து கேள்வி கேளுங்கள்" என்றார்.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?