Tamilnadu
சூடுபிடித்த தேர்தல் களம் : தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!
தமிழ்நாட்டில் ஏப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்தியா கூட்டணி தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல் தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன், வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி, காஞ்சிபுரம் வேட்பாளர் க.செல்வம், சேலம் வேட்பாளர் செல்வகணபதி, திருவண்ணாமலை வேட்பாளர் சி.என். அண்ணாதுரை, வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ,திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம், மதுரை சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன், விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார், இராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
Also Read
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!