Tamilnadu
#Election2024 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் யார் : முழு தகவல் இங்கே!
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். தமிழ்நாட்டிலும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.
1. தி.மு.க. (DMK) - 21
2. காங்கிரஸ் (Congress) - 10 (தமிழ்நாடு - 9, புதுச்சேரி - 1)
3. ம.தி.மு.க. (MDMK) - 1
4. சி.பி.ஐ.(எம்) (CPIM) - 2
5. சி.பி.ஐ. (CPI) - 2
6. வி.சி.க. (VCK) - 2
7. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) - 1
8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (KMDK) - 1 - என 40 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகப்பட்டினம் தொகுதியில் வை.செல்வராஜ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பூர் தொகுதியில் மீண்டும் கே.சுப்பராயன் எம்.பி போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
இம்மானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!
-
போராளிக்கான தழும்பு...! விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி
-
நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!