Tamilnadu
தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி : மதிமுக மற்றும் விசிகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு - எத்தனை தொகுதிகள்?
இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாகப் பாசிச ஆட்சியை நடத்தி வரும் பா.ஜ.கவை வீழ்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கித் தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுகிறது.
இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'இந்தியா' கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டிலும் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்றே அழைக்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அண்மையில் தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு MP தலைமையில் பேச்சுவார்த்தை குழு அறிவிக்கப்பட்டது. இக்குழு கூட்டணி கட்சிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
இதையடுத்து கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் நாமக்கல் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்த தொகுதிகள் என்று அறிவிக்கப்படவில்லை.
இதையடுத்து இன்று மதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விசிகவுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதேபோல் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தி.மு.க.தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“விஜய்க்கு சொல்புத்தியும் இல்லை சுயபுத்தியும் இல்லை” : தாராபுரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
-
Party Fund வாங்கிய த.வெ.க?; நீதிமன்றத்தில் அம்பலப்பட்ட மெகா ஊழல் : ஆர். எஸ்.பாரதி அறிக்கை!
-
முடங்கியுள்ள பொருளாதாரம் ; த.வெ.க அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? - தங்கம் தென்னரசு கேள்வி!
-
“பணத்தைக் கொடுத்து ஓட்டுகளையும் விலைக்கு வாங்க தூய சக்தி விஜய்” : DMK IT WING விமர்சனம்!
-
படுதோல்வியடைந்த தவெக.. அமோக வெற்றி பெற்ற திமுக.. கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவன தேர்தலில் நடந்தது?