Tamilnadu
“வாயாலே பொய் வடைகளை சுடும் பிரதமர்...” : மோடி உருவம் பதித்த முகமூடி அணிந்து நூதன போராட்டம் !
சென்னை ஆர்.கே.நகரில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது உருவம் பதிந்த முகமூடியை அணிந்து பொதுமக்களுக்கு வடை வழங்கி திமுக சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்து உள்ள பிரதமர் நரேந்திர மோடி மோடி இன்று தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளதாகவும் செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்த நிலையில் வழக்கம்போல் பிரதமர் மோடி தனது வாயாலேயே பொய் வடைகளை சுட்டுவதாக கூறி, திமுக சுற்றுச்சூழல் அணி கிண்டல் செய்யும் விதமாக நூதன முறையில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகரில் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் 'வாயாலே வடை சுடும் மோடி' என்ற மோடி எதிர்ப்பு போராட்டத்தை மாநில துணை செயலாளர் பழ.செல்வகுமார் தலைமையில் சென்னை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் அமைப்பாளர் தீனதயாளன், மாவட்ட துணை அமைப்பாளர் வசந்தகுமார் ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
பிரதமர் மோடி தலைமையிலான பாசிச பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலத்தில் இந்தியா கண்ட பலன் நாடு வளர்ச்சி அடையாமல் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளதை தான் இப்படி பொய் வடையாய் சுட்டுத் தள்ளுகிறார் என்று மோடியை கண்டித்து நடைபெற்ற இந்த போராட்டத்தில், பிரதமர் மோடி உருவம் பொறித்த மாஸ்க்கை அணிந்து பொதுமக்களுக்கு மோடியின் பொய் புரட்டுகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் மெதுவடைகளை வழங்கினார்கள்
மேலும் முகமூடியை பொதுமக்களுக்கும் அணிவித்து, அவர்களது கையில் மெதுவடையை வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். எனினும் தொடர்ந்து பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்காக நல்லது செய்ததாக பொய்யுரைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!