Tamilnadu
’வாசிக்கலாமா’ : சென்னை மாநகராட்சியின் அசத்தலான திட்டம் : அது என்ன?
கல்விக்கு என்று தனிக்கவனம் செலுத்தி சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு வருகிறது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னையில் பாழடைந்த பள்ளிகள் கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு அப்பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பூங்காக்களில் புத்தக வாசிப்பு மையத்தை அமைக்கச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக எம்.ஆர்.எப் பூங்கா, எம்.எம்.டி.ஏ பூங்கா, கே.கே.ஆர் கார்டன், அன்சா கார்டன், ஜீவா பூங்கா, ராகவேந்திரா பூங்கா, மே தின பூங்கா உள்ளிட்ட 10 பூங்காக்களில் இந்த திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக ராயபுரத்தில் உள்ள ராகவேந்திரா பூங்காவில் புத்தக வாசிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து காலை மற்றும் மாலையில் நடைப்பயிற்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் புத்தக மையத்தில் இருக்கும் புத்தகங்களை எடுத்து சிறிது நேரம் படித்துச் செல்கிறார்கள்.
Also Read
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!