Tamilnadu

Google Map-ஐ நம்பி கார் ஓட்டிச் சென்ற இளைஞர்கள் : ஆபத்தான இடத்திற்கு அழைத்து சென்றதால் பரபரப்பு!

நாம் ஒரு இடத்திற்குச் செல்லும்போது வழி தெரியவில்லை என்றால் சாலையில் இருப்பவர்களிடம் கேட்டுக் கேட்டுச் செல்வோம். ஆனால் இப்போது நாம் Google Map உதவியை நாடுகிறோம்.

இப்படி Google Map-ஐ பயன்படுத்திப் பயணிக்கும்போது சில நேரங்களில் தவறான வழியைக் காட்டி, செல்ல வேண்டிய இடத்திற்குப் பதில் வேறு இடத்திற்குச் சென்ற சம்பவம் நம்மில் சிலருக்கு நடத்திருக்கும். அப்படி Google Map பயன்படுத்தி கார் ஓட்டிச் சென்ற ஒருவருக்கு மோசமான ஒரு சம்பவம் சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.

தொடர் விடுமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த மூன்று நாட்களாக அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்த நிலையில் கர்நாடக மாநில இளைஞர்கள் சிலர் சொகுசு கார் ஒன்றில் நீலகிரி சுற்றுலாவை முடித்துக் கொண்டு Google Map உதவியுடன் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது கூடலூர் அருகே வரும்போது Google Map காட்டிய சாலையில் சென்றபோது வழிதவறி செங்குத்தான படிக்கட்டுகள் நிறைந்த வழியில் காரை ஓட்டிச்சென்றுள்ளனர். இதனால், கார் படிக்கட்டிலேயே சிக்கிக் கொண்டது. இதையடுத்து, செய்வதறியாது திகைத்து நின்ற சுற்றுலாப்பயணிகளின் காரை, உள்ளூர் மக்கள் மீட்டனர். இதையடுத்து, உள்ளூர் மக்களுக்கு நன்றி தெரிவித்த கர்நாடக சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனத்தில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

Also Read: புதுவை : துணை குடியரசு தலைவர் நிகழ்ச்சியில் பத்திரிகையளார்கள் அவமதிப்பு - விழாவை புறக்கணித்ததால் பரபர !