Tamilnadu
தி.மு.க இளைஞரணி 2 ஆவது மாநில மாநாடு : இன்றே விழாக்கோலம் பூண்டுள்ளது சேலம்!
தி.மு.க இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்காக மிகப் பிரம்மாண்டமான திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திடலின் முகப்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் கம்பீர முகம்கள் பொறித்த மலை போன்ற வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இளைஞர் அணியின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று சேலம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு மாநாட்டுத் திடலுக்கு வருகை சந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். அப்போது விண்ணைப் பிளக்க வாழ்த்து முழக்கங்கள் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து தி.மு.க இளைஞர் அணியின் மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க இளைஞரணியின் மாநாட்டுத் தீப ஒளி சுடரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பிறகு மாநாடு திடலில் இந்த தீப ஒளி சுடர் ஏற்றப்பட்டது.
பின்னர் தி.மு.க இளைஞரணியின் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பேரணி கன்னியாகுமரியில் தொடங்கி 13 நாட்கள் 8647 கிலோ மீட்டர் பயணித்து இன்று சேலம் மாநாட்டுத் திடலுக்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து தி.மு.க இயக்கத்தின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியை அடுத்து திராவிட இயக்கத்தின் வரலாற்றை மெய்சிலிர்க்க வைத்த ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. இதில் 1500 ட்ரோன்கள் மூலம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவங்கள் வானில் ஜொலித்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
Also Read
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !