Tamilnadu
”சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழ்நாடு” : புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!
தமிழ்நாட்டில் முதல்முறையாக நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா இன்று சென்னையில் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் சிங் தாக்கூர், எல் முருகன், நிசித் பிரமாணிக் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று உரையாற்றினார்.
இதையடுத்து கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கான சுடரை ஏற்றி வைத்து போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், "2024ல் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும்.
தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழியின் கலாச்சாரம் உங்களுக்கு உங்களின் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வைத் தரும். விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறேன்.கேலோ இந்தியா விளையாட்டு சின்னத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் படம் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வீரமங்கை வேலுநாச்சியார் பெண் சக்திகளின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அனைத்து தரப்பு மக்களும் திறமைகளை வெளிப்படுத்தி முன்னேற்ற கேலோ இந்தியா போட்டி வழிவகுக்கிறது.
சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது. விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, பாரா, மாரியப்பன் ஆகிய சிறந்த வீரர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். 2036-ல் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்த முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!