Tamilnadu
பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை : பா.ஜ.க பிரமுகரை அதிரடியாக கைது செய்தது போலீஸ்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாஞ்சில் ஜெயக்குமார். இவர் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.
அப்போது, சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கு நாஞ்சில் ஜெயக்குமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அவரது செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு வக்கிரமாகப் பேசியுள்ளார். ஜெயக்குமாரின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர், பா.ஜ.க பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப்பதிவு அவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க பிரமுகர் குறித்து விசாரிக்கும் போது, கடந்த 2022 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரிடம் பண மோசடியில் ஈடுபட்டது உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு இவர்கள் மீது குண்டர் சட்டம் வாய்ந்த நிலையில் நீண்ட நாட்கள் சிறையிலிருந்துள்ளார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்த பிறகு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!