Tamilnadu
"சமூக மேம்பாட்டு திட்டம்" - விடியல் பயண திட்டத்தை பாராட்டிய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் !
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்க சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றும், நாளையும் (7,8.01.2024) ஆகிய 2 நாட்களில் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் இந்த நிகழ்வில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், தமிழ்நாடு அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.மேலும் இதில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் என மொத்தம் 35 நாடுகளில் இருந்தும் டாப் தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளது.
இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் கலந்துகொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்திய சந்தைகளில் உலக நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு தமிழ்நாடு சாதமாகமான இடமாக உள்ளது. அதிக பொறியாளர்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இங்கு திறமையான ஊழியர்களும் இருக்கிறார்கள்.
தற்போது சீனாவிற்கு மாற்றான இடத்தை உலக முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதால், பெரு நிறுவனங்களிம் கவனத்தை ஈர்க்க தற்போது முக்கிய தருனமாக உள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து தமிழக அரசு அறிமுகம் படுத்தியது மூலம் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு பெருகிறது. இந்த திட்டத்தை தனிப்பட்ட திட்டம் என்று பார்க்காமல் சமூக மேம்படுத்தலாக பார்க்க வேண்டும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தென் மாவட்டங்களில் அதிக முதலீடு செய்திருப்பது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. நான் முதல்வன் திட்டம் தமிழகத்தின் சிறந்த திட்டம். இத்திட்டம் மூலம் மாணவர்களின் திறன் அதிகரித்து வேலை வாய்ப்பு அதிகரிக்கும்" எனக் கூறினார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !