Tamilnadu

“கலைஞருக்கு விஜயகாந்த் அளித்த தங்கப் பேனா”: கலைஞருக்கும் விஜயகாந்த்துக்குமான நட்பு குறித்த சிறப்பு செய்தி

1987 - கலைஞர் கதை, வசனத்தில் "வீரன் வேலுத்தம்பி" படத்தில் நடித்திருந்தார் விஜயகாந்த்

1988 - கலைஞர் வசனத்தில் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில் கதாநாயகன் விஜயகாந்த்

1989 - கலைஞரின் கதை, வசனத்தில் "பொறுத்தது போதும்" படத்தில் நடித்தார் விஜயகாந்த்

1987-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரின் கதை, வசனத்தில் வெளியான "வீரன் வேலுத்தம்பி" படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் விஜயகாந்த்...

பின்னர், 1988-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் வசனத்தில் "மக்கள் ஆணையிட்டால்" என்ற படத்தில் கதாநாயகனான நடித்தார் விஜயகாந்த்.

1989-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரின் கதை, வசனத்தில் வெளியான "பொறுத்தது போதும்" திரைப்படத்திலும் நடித்திருந்தார் விஜயகாந்த்.

1987-ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞரின் கதை வசனத்தில் "சட்டம் ஒரு விளையாட்டு" திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடித்த விஜயகாந்த், கலைஞரின் ஆக்ரோஷ வசனங்களை பேசி ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கியதோடு, அவருக்கு ஆக்ஷன் ஹீரோவாகவும் அங்கீகாரம் அளித்தது

முத்தமிழறிஞர் கலைஞர் மீது எப்போதும் தனி அன்பு கொண்டவர் விஜயகாந்த். திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளை கலைஞர் தலைமையில் நடத்தினார் விஜயகாந்த்.

1996 - கலைஞரின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி விழா நடத்தினார் விஜயகாந்த். திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, கலைஞருக்கு தங்கப் பேனாவை பரிசாக அளித்தார். முத்தமிழறிஞர் கலைஞர் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்ட விஜயகாந்த். திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளை முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் நடத்தினார்.

1996 ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த், மெரினா கடற்கரையில் கலைஞரின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தார்.

கலைஞர் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் நலம் விசாரித்தார் விஜயகாந்த். கலைஞர் மறைவின்போது கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தார் விஜயகாந்த். வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் கலைஞரின் ஓய்விடம் சென்று வணங்கினார் விஜயகாந்த்.

முத்தமிழறிஞர் கலைஞர் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், கலைஞர் மறைவின் போது வெளிநாட்டில் இருந்த விஜயகாந்த், கண்ணீர் மல்க காணொலி அனுப்பி தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராக கலைஞரின் ஓய்விடம் சென்று தனது வணக்கத்தை செலுத்தினார்.

Also Read: கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை!