Tamilnadu
பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமானார் : கண்ணீரில் கட்சி தொண்டர்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் விஜயகாந்த். பின்னர் 2005ம் ஆண்டு தே.மு.தி.க கட்சியைத் தொடங்கி அரசியலில் கால்பதித்தார். பிறகு 2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தே.மு.தி.க எதிர்க்கட்சி அந்தஷ்தை பெற்றது. இதனால் 2011 -2016ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.
இதையடுத்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைக் குறைத்துக் கொண்டார். தொடர்ந்து சிகிச்சை ஓய்வு என்று விஜயகாந்த் இருந்தார். 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 18ம் தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். இங்கு இரண்டு வாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் நடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தே.மு.தி.க தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கேப்டன் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் இன்று காலை காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!