Tamilnadu
முறைகேட்டில் ஈடுபட்ட பெரியார் பல்கலை. துணைவேந்தர்... அதிரடியாக கைது செய்த காவல்துறை - பின்னணி என்ன ?
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை கீழ் 120-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெகநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் ஜெகநாதனின் பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் ஊழல் குற்றச்சாட்டுகள் என தொடர்ச்சியான புகார்கள் எழுந்து வந்தது.
இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள ஜெகநாதன், பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிற் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் என்பவர் அரசு அனுமதி பெற்று சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதிரடியாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்த துணை வேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த பவுண்டேஷன் பெயரில் 10 தனியார் நிறுவனங்களுடன் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் என்ற அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஒப்பந்தத்தை கொண்டு அந்த சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் பெரியார் பல்கலைக்கழகத்தின் எழுச்சி இணை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளை ஈடுபட்டு வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து அந்த பூட்டர் பவுண்டேஷனின் நிர்வாகிகளான பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களும் இந்த புகாரின் அடிப்படையில் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர இந்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள 10 தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் விசாரணைக்குள் கொண்டுவரப்படுவார்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஏற்கனவே தொழிற்சங்கத்தினர், பேராசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு முறைகேடு புகார்களை தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளனர்.
குறிப்பாக சட்டவிரோதமாக பணியாளர்களை நியமிப்பது, தகுதி இல்லாத ஆசிரியர்களை நியமிப்பது பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு ஆட்சி மன்ற குழுவின் அனுமதி இல்லாமல் பல்வேறு தனியார் அமைப்புகளுக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், இந்த முறைகேட்டில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“SIR பணிக்கு ஒரு வார கால நீட்டிப்பு என்பது திமுக-வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!” : என்.ஆர்.இளங்கோ!
-
சிவகங்கை பேருந்து விபத்து! : ஆறுதல் மற்றும் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“திண்டுக்கல்லில் சுமார் 22,000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன!” : அமைச்சர் இ.பெரியசாமி குற்றச்சாட்டு!
-
“டிட்வா புயலையொட்டி சென்னையில் 22 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்!” : சென்னை மாநகராட்சி தகவல்!