Tamilnadu
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்? : அமைச்சர் சேகர்பாபு சொன்ன மகிழ்ச்சியான தகவல்!
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை இன்று அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை பொங்கலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க இருக்கிறார். இப்பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோன மற்றும் கனமழை காரணமாகப் பேருந்து நிலையத்திற்கான சேவை தள்ளிப்போனது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. 1200 மீட்டர் தூரம் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியும் முடிந்துவிட்டது.
இந்த பேருந்து நிலையம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும் போது 2310 பேருந்துகள் தினந்தோறும் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும். கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் இப்பேருந்து நிலையத்தைப் பயன்படுத்துவார்கள்.
மேலும், மக்களுக்குத் தேவையான உணவு வசதி, மருத்துவம் மற்றும் மருந்தக வசதி, ஓட்டுநர் நடத்துநர்களுக்கு ஓய்வறை, தீயணைப்புத் துறை வாகனங்கள், புறக்காவல் நிலையம், குடிநீர், கழிப்பிட வசதி, மின்சார வசதி, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!