Tamilnadu

பேரிடரின் போதும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு : விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு!

மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதையடுத்து இன்று மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு விசிக MLA,MPக்களின் ஒரு மாத ஊதியம் ரூ. 10 லட்சத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விசிக தலைவர் தொல். திருமாவளவன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன்,"மிக்ஜாம் புயல் கனமழையிலும் அரசு அதிகாரிகள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மக்கள் மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. அரசு தன்னுடைய சக்திக்கேற்ப மீட்புப் பணிகளைச் செய்து வருகிறது என்பதை நாம் அறிவோம். அனைவரும் களத்தில் இறங்க வேண்டும்.

மிக்ஜாம் புயல் நிவாரண பணிக்காக ரூ.5060 வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் ஒன்றிய அரசு வெறும் ரூ.1000 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாட்டை வஞ்சித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மஹுவா மொய்த்ரா தொடர்ச்சியாக இது மோடி அரசு அல்ல அதானி சர்க்கார் என்று தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார். இதனால் அவரை பா.ஜ.க அரசு பழிவாங்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினரின் பதவியை தங்களின் அரசியல் காரணங்களுக்காகப் பறிப்பது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும்." என தெரிவித்துள்ளார்.

Also Read: வாங்க விவாதிக்க நான் தயார் : குறை சொல்லும் கூட்டத்திற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!