Tamilnadu
மிக்ஜாம் புயல் மழை வெள்ளம் - 1.1 லட்சம் பேர் மீட்பு : மக்களை பாதுகாத்த திராவிட மாடல் அரசு!
மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர்.
மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 3 நாட்களாக இரவு பகலாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் அதிதீவிர நடவடிக்கை காரணமாக சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருந்து மழை தண்ணீர் பல்வேறு இடங்களில் அகற்றப்பட்டு மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கி வருகிறது.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பி ராஜா, மூர்த்தி, முத்துசாமி, சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடர்ந்து நிவாரண பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 1.1 லட்சம் பேர் இதுவரை மீட்பு குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் உயிர் சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு பாராட்டு தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!