Tamilnadu
3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : குற்றவாளிக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே மஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சுமார் 8 வயது மதிக்கத்தக்க 3 சிறுமிகளை தனது வீட்டிற்கு அழைத்து சென்றள்ளார்.
பிறகு அங்கு மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இருப்பினும் சிறுமிகள் இது குறித்து தங்களது பெற்றோரிடம் கூறினர்.
இதன் பின்னர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோரும் குழந்தைகள் நல அமைப்பினரும் ஊட்டி ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலிஸார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சக்தியை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக்திக்கு தலா 7 ஆண்டுகள் என 21 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4500 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜாமினில் வெளியே இருந்த, சக்தியை போலிஸார் கோவை மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!