Tamilnadu

ரூ.20 லட்சம் லட்சம் : கையும் களவுமாக மாட்டிக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரி - அதிரடி கைது!

திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில், தனது வழக்கை முடித்துத் தருவதாகக் கூறி அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் ரூ.20 லட்சம் பணத்தை லட்சமாக வாங்கி சென்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் திண்டுக்கல் - மதுரை தேசி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் கட்டு கட்டாக பணம் இருந்ததைக் கண்டு சந்தேகம் அடைந்தனர்.

பிறகு அந்த வாகனத்தில் இருந்தவரிடம் விசாரித்தபோது அவர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி என்பது தெரியவந்தது. மேலும் மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லட்சம் வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: உபரி நீரில் அடித்து செல்லப்பட்ட கார் - சிறுமி உட்பட 3 பேரை காப்பாற்றிய போலிஸ்: திக் திக் சம்பவம்!