Tamilnadu
வீட்டில் குட்கா பதுக்கிய அ.தி.மு.க வட்டச் செயலாளர் : அதிரடியாக கைது செய்தது போலிஸ்!
தமிழ்நாட்டில் குட்கா மாவா உள்ளிட்ட தடை செய்யப்பட் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கூட பள்ளி கல்லூரிகள் அருகே குட்கா மாவா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தடுக்கும் விதமாக 274 குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மாவா விற்பனை செய்த பாலசுப்பிரமணி என்பவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியபோது சந்திரசேகர் மற்றும் சிமியோன் ஆகிய இருவர் வீட்டில் குட்கா, மாவா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலிஸார் சந்திரசேகர் மற்றும் சிமியோன் ஆகிய இருவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது சந்திரசேகர் வீட்டில் மாவா தயாரிப்பதற்காக பதுக்கி வைத்திருந்த ஜர்தா 37 கிலோ, சீவல் பாக்கு 25 கிலோ, மாவா 4 கிலோ, 2 மிக்சி, 2 ஜார். எடை மெஷின். பேக்கிங் கவர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சிமியோன் வீட்டில் இருந்தும் மாவா, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் சந்திரசேகர் அ.தி.மு.க கட்சியின் 47 வது வட்டச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேரை தனிப்படை போலிஸார் கைது செய்து அவர்களுக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!