Tamilnadu
"நீங்கள் ஒரு கிரிக்கெட் அதிசயம்" : விராட் கோலிக்கு வாழ்த்து சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாகச் செயல்பட்டு வருகிறது. இது வரை ஆடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரில் அசைக்க முடியாத அணியாக அரையிறுதிக்கு நுழைந்தது இந்திய அணி.
இதையடுத்து இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் விளையாடினர். இந்த ஜோடி சிறப்பாக ஆட்டத்தைத் தொடக்கிவைத்தது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 47 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய விராட் கோலி நிதானமாகத் தனது ஆட்டத்தை கில்லுடன் சேர்ந்து விளையாடி வந்தார்.
பிறகு கில் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காலில் ஏற்பட்ட வலி காரணமாக 'ரிட்டயர்' முறையில் வெளியேறினார். பிறகு வந்த சிரேயாஸ் கோலியுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் அடித்தது.
இதில் இந்திய வீரர் விராட் கோலி 100 சதம் அடித்து ஒருநாள் போட்டியில் தனது 50 வயது சதத்தை அடித்து சச்சின் சாதனையை முறியடித்தார். இதையடுத்து விராட் கோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நீங்கள் ஒரு கிரிக்கெட் அதிசயம் என வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சரின் சமூகவலைதள பதிவில், நம்பமுடியாத சாதனை. 50 ஒருநாள் சதங்கள். நீங்கள் ஒரு கிரிக்கெட் அதிசயம். உலகக் கோப்பை அரையிறுதியில் உங்கள் அபார சாதனைக்கு வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!
-
“பள்ளி விடுமுறை நாட்களில்தான் கூட்டம் கூட்டுவார்..” - விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!
-
“இதையெல்லாம் 50 வருடங்களாக பார்த்துவிட்டேன்..” - அவதூறு பரப்புபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக.. அண்ணா பிறந்தநாளில் அன்புக்கரங்கள் திட்டம் - தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
-
கிருஷ்ணகிரியில் 2 லட்ச பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!