Tamilnadu
மலேசியா TO சென்னை... சோதனையில் சிக்கிய தலைமறைவு கேரள குற்றவாளி.. விமான நிலையத்தில் அதிரடி கைது !
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பிரவித் சாஜன் (35). இவர் மீது எர்ணாகுளம் போலீசில், இந்த ஆண்டு தொடக்கத்தில், போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து போலீசார் பிரிவித் சாஜனை கைது செய்து, விசாரணை நடத்துவதற்காக தேடினர்.
ஆனால் அவர் போலீசில் சிக்காமல் தப்பி, மறைவாகிவிட்டார். அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டார் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து எர்ணாகுளம் போலீஸ் கமிஷனர், பிரவீத் சாஜனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல் ஓ சி போடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து, அனுப்பி கொண்டு இருந்தனர்.
இதற்கிடையே இதே விமானத்தில், கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீசால் தேடப்படும், தலைமறைவு குற்றவாளியான பிரவித் சாஜனும் வந்தார். அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள், கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது, இவர் எர்ணாகுளம் போலீசார் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது. இதை அடுத்து அவரை வெளியில் விடாமல் பிடித்து, குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.
அதோடு எர்ணாகுளம் போலீஸ் கமிஷனருக்கு, தேடப்படும் தலைமறைவு குற்றவாளி பிரவித் சாஜன், மலேசியா நாட்டிலிருந்து விமானத்தில் வந்த போது, சென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ளார் என்ற தகவலையும் அனுப்பினர். இதை அடுத்து கேரள மாநில தனிப்படை போலீசார், பிரவித் சாஜனை கைது செய்து, எர்ணாகுளம் கொண்டு செல்வதற்காக, சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!