Tamilnadu

இஸ்ரேலில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட இந்தியர்கள் : தமிழகம் வந்தடைந்த தமிழர்களை வரவேற்ற தமிழ்நாடு அரசு!

பாலஸ்தீனத்தில் உள்ள போராளி அமைப்புகளுக்கும், இஸ்ரேலுக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாலஸ்தீனத்தில் இருக்கும் காசா பகுதியில் இருதரப்புக்கும் இடையே அடிக்கடி பெரும் சண்டை நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்த மோதல் தற்போது மீண்டும் வெடித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் என்ற அமைப்பு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது மூலம் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்த போரில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் பல உயிர்கள் இதில் பலியாகியுள்ளது. தொடர்ந்து இந்த போர் நடைபெற்று வரம் நிலையில், காசா பகுதியில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

இந்த சூழலில் இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீனத்தில் இருந்தும் வெளிநாட்டவர்களை மீட்கும் பணிகளில் அந்தந்த நாடு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா 'ஆபரேஷன் அஜய்' என்ற பெயரில் அங்கே இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதோடு தமிழ்நாடு அரசும் போர் சூழலில் இருக்கும் தமிழர்களை மீட்கும் வருகிறது.

அங்கிருக்கும் தமிழர்களுக்கு நமது தமிழ்நாடு அரசின் அவசர உதவி எண்கள் மற்றும் மெயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. Helpline Nunmbers and e-mail ids: +91-87602 48625; +91-99402 56444; +91-96000 23645. - nrtchennai@tn.gov.in - nrtchennai@gmail.com - ஆகும்.

இந்த நிலையில் இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் 212 இந்தியர்கள் இன்று இந்தியா அழைத்து வரப்பட்டனர். இதைத்தொடர்ந்து 212 இந்தியர்களில் 21 தமிழர்கள் பத்திரமாக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா, இண்டிகோ விமானம் மூலம் தமிழ்நாடு அழைத்து வரப்பட்டனர். மேலும் அதில் 14 பேர் சென்னை வந்தடைந்தனர். அவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று வரவேற்பளித்தார்.

தொடர்ந்து மீதமுள்ள கோவையை சேர்ந்த 7 பெரும் கோவைக்கு பத்திரமாக சென்றனர். அவர்களை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் நேரில் சென்று வரவேற்றார். இதையடுத்து அவர்கள் அனைவரும் தங்கள் வீட்டுக்கு பத்திரமாக சென்றனர். மேலும் தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையால் தமிழ்நாடு வந்தடைந்த 21 தமிழர்களும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Also Read: "பாஜக கூட்டணியின் 40 தலைவர்கள் எங்கள் கட்சியில் சேர ஆர்வமாக இருக்கிறார்கள்" -கர்நாடக காங்கிரஸ் அறிவிப்பு!