Tamilnadu

நெடுங்குன்றம் சூர்யாவை தொடர்ந்து படப்பை குணா.. ரவுடிகளுக்கு பதவிகளை அள்ளிக்கொடுக்கும் பாஜக !

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என். குணசேகரன். கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் துணையுடன் அதிமுக பிரமுகராகவும் தொழில் நிறுவனங்களை மிரட்டி தொழிலதிபராகவும் வலம் வந்தார்

இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளது . இந்த 48 வழக்கில் 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும்.

இதனிடையே இவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். தன்னை காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என தெரிந்துகொண்டு, படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு சரணடைந்தார்.சிறையில் இருந்த படப்பை குணா தற்போது ஜாமினில் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியே வந்தார் .

இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருப்பெரும்பெரும்புதூரில் நடைபெற்ற, பாஜக கூட்டம் ஒன்றில் பாஜகவில் இணைத்துக்கொள்ள வந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கே.எஸ். பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், " மாநில தலைவர் கே அண்ணாமலை மற்றும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாநில செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோத் பி செல்வம் ஒப்புதலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட பார்வையாளர் பாஸ்கர் ஆலோசனை படியும், மாநில ஓபிசி அணி தலைவர் சாய் சுரேஷ் ஆலோசனை படியும் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக படப்பை குணா (எ )குணசேகரன் நியமிக்கப்படுவதாக " அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக, படப்பை குணா நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் 50க்கும் வழக்குகளைக் கொண்ட பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா பாஜக மாநில பட்டியல அணி மாநில செயலாளராக, நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது ரவுடி படப்பை குணாவிற்கும் பதவி வழங்கப்பட்டதால் மீண்டும் மீண்டும் தமிழக பாஜக ரவுடிகளின் கூடாரமாக மாறிவரும் நிலை தொடருகிறது

Also Read: மகளிர் இடஒதுக்கீட்டில் சதி அரசியல்: பெண்களுக்கான உரிமையை பா.ஜ.க. எப்போதும் வழங்காது - முரசொலி விமர்சனம் !