Tamilnadu

தொடர் மழையால் அடைபட்ட கழிவுநீர் கால்வாய்.. களத்தில் இறங்கி சுத்தம் செய்த திமுக கவுன்சிலரின் கணவர் ! VIDEO

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 24-வது வார்டு உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த ரேணுகா தயாளன் என்பவர் கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இந்த வார்டில் எந்த பிரச்னை இருந்தாலும், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க உடனடியாக கவுன்சிலர் தீர்த்து வைத்து வருகிறார்.

இந்த சூழலில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 1 வார காலமாக ஆரணி பகுதியில் தொடர் மழை பெய்து வந்துள்ளது. இதனால் 24-வது வார்டு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் உள்ள மக்கள், இந்த அடைப்பு பிரச்னை தொடர்பாக, அந்த வார்டு பெண் கவன்சிலர் ரேணுகாவிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பெண் கவுன்சிலர் ரேணுகாவும், தெருக்களில் கழிவுநீர் தேங்கி டெங்கு மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்படும் என்று அச்சத்தால் உடனடியாக அதனை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களிடம் வாக்குறுதி கொடுத்தார்.

இந்த நிலையில், வார்டு உறுப்பினரின் கணவர் தயாளன், தாமாக முன்வந்து கழிவுநீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்ய தொடங்கினார். அதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களும் தயாளனுடன் சேர்ந்து கால்வாயில் இறங்கி கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய தொடங்கினர். தற்போது இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி மக்கள் மத்தியில் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

தொடர் மழையால் கழிவுநீர் கால்வாய் அடைபட்டதாக மக்கள் புகார் கொடுத்ததை தொடர்ந்து, களத்தில் இறங்கி திமுக கவுன்சிலரின் கணவர் சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Also Read: “தனி நபரை விட இயக்கத்தின் வெற்றியே முக்கியம்..” - கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் !