Tamilnadu
ராகுல் காந்தி குறித்து ஆபாச பதிவு.. எழுந்த புகாரில் பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலிஸ் !
இந்தியா முழுவதும் பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து ஆபாசம், பாலியல் புகார், ஊழல், பண மோசடி என பல புகார்கள் வந்துகொண்டிருக்கிறது.
சில ரௌடிகள் கூட, பாஜகவில் இணைந்து தங்களை பாதுகாத்து கொள்கின்றனர். இதுபோல் குற்றச்செயல்களில் ஈடுபடும் அனைவருக்கும் ஒரு அடைக்கலம் தரும் இடமாகவே பாஜக உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பாஜக அவ்வாறே இருந்து வருகிறது. மேலும் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் சிலர் அவ்வப்போது அவதூறு, போலி செய்தி வெளியிட்டு கைது செய்யப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது பாஜக ஐடி விங் பொறுப்பாளர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை ஆபாசமாக செய்தி வெளியிட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் இளைஞரணியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், இளைஞரணியின் சமூக ஊடக பொறுப்பாளராகவும் இருப்பவர் பிரவீன் ராஜ். இவர் ‘சங்கி பிர்ன்ஸ்’ என்ற பெயரில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகிறார்.
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரை ஆபசமாக சித்தரித்து தனது சமூக ஊடகத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பலர் மத்தியிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், கரூர் மாவட்ட காங்கிரஸ் தரப்பில் இருந்து போலிசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போலீசார், பாஜக நிர்வாகி பிரவீன் ராஜை அதிரடியாக கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தனது சமூக வலைதளத்தில் “கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கொடுத்த புகாரில் , ராகுல்காந்தி,பிரியங்கா காந்தி அவர்களின் வீடியோவை எடிட் செய்து ஆபாசமாக வெளியிட்டு, அறுவெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்த பாஜகவின் ஐ.டி விங் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக ஒருவரை விமர்சிக்கலாம். ஆனால், ஒரு அண்ணன், தங்கையை அரசியலில் ஈடுபடுகிறார்கள், பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்பதாலேயே அறுவெறுக்கத்தக்க வகையில் பதிவிடுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜகவின் ஆபாச, வெறுப்பு அரசியல் தமிழ் சமூகத்திற்கே மிகப்பெரிய அவமானம்.
இன்று பிரியங்கா காந்தி.. நாளை நமது வீட்டுப் பெண்கள். இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை ஆபாசமாக, அறுவெறுக்கத்தக்க வகையில் விமர்சிப்பதை காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்துக்கொண்டிராது. இனிமேலாவது பாஜகவினர் இதுபோன்ற ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க அரசியலை கைவிட்டு தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !