Tamilnadu
“பாஜகவில் எந்த கொம்பனாக இருந்தாலும் சரி.. சனாதனம் குறித்து விவாதிக்க தயார்” : அமித்ஷாவிற்கு ஆ.ராசா சவால்!
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு சிலை திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் வீராம்பட்டினம் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.
இந்த பொதுகூட்டத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி பேசுகையில், அமித்ஷாவிற்கு புதுச்சேரியில் இருந்து சொல்கின்றேன். பாஜகவில் எந்த கொம்பனாக இருந்தாலும் வாருங்கள் டெல்லியில் பொதுவெளியில் லட்சம்பேர் கூடும் இடத்தில் சனாதனம் குறித்து விவாதிக்க நான் தயார் நீங்கள் தயாரா? என சவால் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான் அமித்ஷா உள்துறை அமைச்சர் உள்ளார். இல்லையெனில் வேறு வேலைக்கு சென்று இருப்பார். சனாதனத்திற்கு எதிராக நாங்கள் போராடியதால் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஆளுநர், எங்களால்தான் ஆடு மேய்க்காமல் அண்ணாமலை இன்று ஐ.பி.எஸ், வானதி ஸ்ரீனிவாசன் இன்று வழக்கறிஞர் என்றார். மேலும் பேசிய அவர்,
நான் திறந்த வெளியில் சொல்கின்றேன் மோடி, அமித்ஷா, பாஜகவில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைவிட வெள்ளைக்காரார்கள் நாணயமானவர்கள், யோக்கியமானவர்கள் என்றார். இந்த பொதுகூட்டத்தில் அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Also Read
-
ஒன்றிய அரசின் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ஏன் எதிர்க்க வேண்டும்? - முழுவிவரம்!
-
“அது ‘மக்கள் பவன்’ அல்ல; மக்கள் ‘விரோத’ இல்லம்!” - ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!