Tamilnadu
“சனாதனம் பற்றி அவர்களே இப்படிதான் சொல்கிறார்கள்..” : பா.ஜ.க கும்பலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச தேசிய விளையாட்டு போட்டிகள் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையை வழங்கும் நிகழ்ச்சியை சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10 வீரர் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கி இந்த நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து சென்னை பெரியமேடு பகுதியில் அமைந்துள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சர்வதேச தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்று, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகள் என 250 பேருக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கும் விழா விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் போட்டிகளில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "நான் பேசிய உரையாடல்கள் தொடர்பாக வீடியோ காட்சிகள் இணையதளங்களில் உள்ளது. அந்த வீடியோ காட்சியை பாருங்கள். அதில் நான் கூறியதாக கூறும் வார்த்தை இருந்தால் கூறுங்கள். சனாதனம் என்றால் எல்லாம் நிலையானது, எதையும் மாற்ற முடியாது என்று அவர்களே தெரிவிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் பெண்கள் படிக்கக் கூடாது, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று தெரிவித்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்கள். குறிப்பாக பல விளையாட்டு வீராங்கனைகள் இங்கு உள்ளார்கள். ஒரு காலத்தில் கணவன் இறந்தவுடன் மனைவியும் உடன்கட்டை ஏற வேண்டும் என்று தெரிவித்தார்கள். இவையெல்லாம் இன்றளவு பின்பற்றப்படுகிறதா என்ன அவை அனைத்தும் மாற்றப்பட்டு விட்டது.
பல்வேறு போராட்டங்கள் நடத்தி இவை அனைத்தும் மாற்றப்பட்டது. அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நோக்கிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வருகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸுக்கு எதிராக தெரிவித்த கருத்தை எடுத்துக் கொண்டால் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை கொல்வது என்றா அர்த்தம்? மாறாக காங்கிரசின் கொள்கைகளை கொள்கைகளை குறித்த கருத்து தெரிவித்திருந்தார். சமத்துவம் சமூக நீதிக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியை திராவிட முன்னேற்றக் கழகம். நான் எந்த மதத்திற்கு எதிராகவும் பேசவில்லை மாறாக மதத்திற்குள் உள்ள சாதி பாகுபாடுககு எதிராகவே பேசுவேன்" என்று கூறினார்.
Also Read
-
“கலைஞரை ரோல்மாடலாக எடுத்து செயல்பட வேண்டும்” : மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதலமைச்சர் பேச்சு !
-
ஒன்றிய அரசின் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ஏன் எதிர்க்க வேண்டும்? - முழுவிவரம்!
-
“அது ‘மக்கள் பவன்’ அல்ல; மக்கள் ‘விரோத’ இல்லம்!” - ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!