Tamilnadu
நடுரோட்டில் கிளம்பிய புகை.. பற்றியெரிந்த பைக்.. குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து செல்லும்போது அதிர்ச்சி !
சென்னை பல்லாவரம் அடுத்த அனாகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில், அவர்கள் அந்த பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். பள்ளி முடிந்து தினமும் ஸ்டீபன்தான் குழந்தைகளை வீட்டு அழைத்து வருவார் என்று தெரிகிறது.
இந்த சூழலில் அதே போல் சம்பவத்தன்றும் பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்கு தனது ஸ்கூட்டியில் அழைத்து சென்றுள்ளார். அப்போது பம்மல் பிரதான சாலையில் திடிரென அவர் சென்றுகொண்டிருந்த பைக் நின்றுள்ளது. இதனால் வண்டியை மீண்டும் இயக்க முயன்றார். அப்போது வண்டியில் இருந்து திடீரென புகை கிளம்பியுள்ளது.
புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்டீபன், உடனடியாக தனது பிள்ளைகளுடன் வாகனத்தில் இருந்து இறங்கி சிறிது தூரம் நகர்ந்து விட்டார். அவர் சென்ற சில மணி துளிகளிலேயே அந்த வண்டி பற்றியெரிய தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் கொளுந்து விட்டு தீ எரிந்ததால், வண்டி முழுவதுமாக எரிந்து சேதமானது. தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த சங்கர் நகர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!