Tamilnadu
விசாரணை வளையத்தில் சிக்கும் சீமான்? : நடிகை விஜயலட்சுமியிடம் 2வது நாளாக விசாரணை : நடந்தது என்ன?
சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்த நடிகை விஜயலட்சுமி அண்மைக்காலங்களாக சீமான் குறித்து பல்வேறு காட்டமான விமர்சனங்களை முன்வைத்து ஃபேஸ்புக்கில் வீடியோவாகவும் நேரலையாகவும் பேசி வந்தார்.
இதன் காரணமாக சீமானின் ஆதரவாளர்கள் இவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இருப்பினும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீமான் மீது விமர்சனங்களை முன்வைத்து தனது ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவிடுவதும், நேரலையில் பேசுவதுமாக இருந்தார் விஜயலட்சுமி.
அதன்பின்னர் சீமானுக்கு ஆதரவாக ஹரி நாடார் தன்னை சாதி ரீதியிலும், தனிமனித ரீதியிலும் புண்படுத்தும்படி பேசியதாக குற்றஞ்சாட்டி வீடியோ ஒன்றினையும் வெளியிட்டார் நடிகை விஜயலட்சுமி.
சீமான் மீதும் ஹரி நாடார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர் “என்னால் வாழ முடியவில்லை, என்னுடைய மரணத்துக்கு நாம் தமிழர் கட்சியின் சீமானும், ஹரி நாடாருமே காரணம்” எனக் கூறியிருந்தார். இதனையடுத்து, குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக மயக்கமடைந்த விஜயலட்சுமி சென்னை அடையார் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இதனைத்தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்படவே நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கிடைக்கவேண்டும் என நோக்கில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை நடிகை விஜயலட்சுமி சந்தித்தார். அப்போது கண்ணீர் மல்க பேசிய நடிகை விஜயலட்சுமி, “சீமான் மீது 2011ல் புகார் அளித்தது போல் தற்போதும் மீண்டும் புதிதாக புகார் அளித்துள்ளேன். என்னை சீமான் திருமணம் செய்தது உண்மைதான்; நான் சீமானின் மனைவி. அவரால் அவமானப்பட்டு இங்கு வந்து நிற்கிறேன்.
என்னை நீதிமன்றம் செல்லவிடாமல் சீமான் தடுத்துவிட்டார். சீமானை கைது செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சீமானை கைது செய்யும் வரை என்னுடைய போராட்டம் தொடரும். நாம் தமிழர் கட்சியை நடத்துவதால் தனது தம்பிகள் தன்னை பார்த்துக்கொள்வதாக சீமான் கூறுகிறார். நான் வெளியிட்டுள்ள வீடியோக்களுக்கு சீமானின் பதில் என்ன?” எனத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக வழக்கை கையில் எடுத்த தமிழ்நாடு காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று 2 வது நாளாக போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரவாயலில் உள்ள கோயம்பேடு துணை ஆணையர் அலுவலகத்தில் கோயம்பேடு துணை காவல் ஆணையர் உமையாள் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடைபெற்றது.
மேலும், ராமாபுரம் காவல் நிலையத்தில் நேற்று மாலை 6:15 மணி முதல் 11 மணி வரை விஜயலட்சுமியிடம், துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து திருவள்ளுவர் நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி விசாரணைக்கு ஆஜர் ஆனா நிலையில், தற்போது 2வது நாளாக இன்று விசாரணை நடைபெற்றது.
விசாரணைக்கு பின் நடிகை விஜயலட்சுமி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி தனது ரகசிய வாக்கு மூலம் அளித்த பின்பு போலிஸார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் தொடர்பாக நீதிமன்றம் தெரிவிக்கும் என போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!