Tamilnadu
12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. 2 வாலிபர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!
சிவகங்கை மாவட்டம், சூரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணபதி மற்றும் பிரபு. வாலிபர்களான இவர்கள் இருவரும் கடந்த 2011ம் ஆண்டு ஆடு மேய்க்க சென்ற 12 வயது சிறுமியை ஏமாற்றி மது மற்றும் பிரியாணி ஆகியவை வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது பற்றி சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவர் மீதான போக்சோ வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கணபதி மற்றும் பிரபு மீதான குற்றம் நிரூபிக்கப்படவே அதன் மீது நீதிபதி சரத் ராஜ் தீர்ப்பு வழங்கினார்.
இதில் கணபதி மற்றும் பிரபு ஆகிய இருவருக்கும் தால 20 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ 7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
Also Read
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !
-
“இது ஆன்மிகம் அல்ல; கேடுகெட்ட அரசியல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
“மதுரை தொழில் நகரமாகவும் புகழ் பெறவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை இலட்சியம்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா” : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!