Tamilnadu
கஞ்சா கடத்தல், அரிவாள் வெட்டு, பெண் மீது தாக்குதல்.. பா.ஜ.க நிர்வாகிகள் செய்த அராஜகம் - போலிஸ் அதிரடி!
அகில இந்திய அளவிலே ரவுடிகளின் கூடாரமாக பா.ஜ.க கட்சி மாறிக் கொண்டிருக்கிறது. போலிஸாரால் தேடப்படும் கொலை-கொள்ளை குற்றவாளிகள் காவித்துண்டை போர்த்திக் கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பா.ஜ.கவில் இணைந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் இதேநிலைதான் இருந்து வருகிறது. தற்போது ஒன்றிய அமைச்சராக இருக்கும் எல்.முருகன் தமிழ்நாட்டுத் தலைவராக இருக்கும் போது பல முக்கிய ரவுடிகள் பா.ஜ.கவில் இணைந்தனர். தற்போது அண்ணாமலை தலைமையில் ரவுடிகள் கூட்டம் கூட்டமாக காவித்துண்டை மாட்டிக் கொண்டு பா.ஜ.கவில் இணைந்து வருகின்றனர்.
இப்படி ரவுடிகள் கட்சிக்குள் புகுந்து விட்டதால், அதன் நிர்வாகிகளும் தற்போது ரவுடிகளைப்போல் நடந்து கொண்டு வருகின்றனர். கஞ்சா கடுத்துவேது, பொதுமக்களை மிரட்டுவது, பெண்களை தாக்குவது, வீடுகளை இடிப்பது, தடியடி சம்பவங்கள் செய்வது போன்ற அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் பல்வேறு வழக்குகளில் பா.ஜ.க நிர்வாகிகளை போலிஸார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் போலிஸார் நடத்திய வாகன சோதனையின் போது, காரில் 228 கிலோ கஞ்சா கடத்தி வந்த 16 பேரை போலிஸார் கைது செய்தனர். இதில் சாத்தான்குளம் ஒன்றிய பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு தலைவர் மணிகண்டன் என்பவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று சங்கரன்கோவிலில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை யாத்திரை சுவர் விளம்பரம் சம்பந்தமாக நெடுஞ்சாலை பணியாளர்களைத் தாக்கிய வழக்கில் பா.ஜ.க நகரச் செயலாளர் விக்னேஷ் மற்றும் கணேசன் ஆகிய இருவரை போலிஸார் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவத்தில் ஆத்தூர் கெங்கவல்லி அருகே பட்டதாரி வாலிபர் ரவிக்குமாரை அரிவாளால் வெட்டிய வழக்கில் பா.ஜ.க சேலம் கிழக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சாமுவேலை கைது செய்துள்ளனர்.
இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு பகுதியில் இடத்தகராறில் சரோஜா என்ற பெண்ணை பா.ஜ.க கவுன்சிலர் சாவர்க்கர் என்பவர் காலால் எட்டி உதைத்து அடிதடியில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கில் சாவர்க்கர் உள்ளிட்ட நான்கு பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
இப்படி கஞ்சா கடத்தியது, பெண்ணை எட்டி உதைத்து, வாலிபரை அரிவாளால் வெட்டியது என பா.ஜ.க நிர்வாகிகள் நடந்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் முகம் சுளிக்கவைத்துள்ளது.
Also Read
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!
-
“ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தமிழ்நாட்டின் குரல்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!