Tamilnadu

”இனி இப்படி செய்தி போட்டால் வழக்குப் போடுவேன்”.. கொடநாடு வழக்கில் ஊடகங்களை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சாயன், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, திபு, சதீஷன், உதயகுமார் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு சம்பந்தமாக தனிப்படை போலிஸார் விசாரித்த போது, சேலத்தை சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் இந்த கொலை கொள்ளை சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சேலத்தில் மர்ம வாகன மோதியதில் கனகராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி போலிஸார் கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட கனகராஜ் வாகன விபத்தில் மரணமடைந்தது குறித்து வழக்கு பதிவு செய்து சேலம், சென்னை, கோவை, நீலகிரி போன்ற பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொடநாடு பங்களாவிலிருந்து எடப்பாடி பழனிசாமி சொல்லிதான் ஆவணங்களை எடுத்து வந்ததாக கார் ஓட்டுநர் கனகராஜ் சொன்னதாக அவரது சகோதர் தனபால் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் கூறியிருந்தார். எனவே தனது தனது சகோதரர் விபத்தில் இறக்கவில்லை. திட்டமிட்டு கொலை செய்து விபத்தாக ஜோடித்து விட்டனர் என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.

இந்நிலையில், கனகராஜ் ஜெயலலிதாவின் ஒட்டுநராக இருந்ததில்லை. இனி ஊடகங்கள் அப்படி செய்தி போட்டால் வழக்குப் போடுவேன் என்று கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு பயத்திலும் பதட்டத்திலும் ஊடகங்களை எடப்பாடி பழனிசாமி மிரட்டும் விதத்தில் பேசியுள்ள சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”லடாக்கில் ஒரு அங்குல நிலம் கூட இழக்கவில்லை என பொய் சொல்லும் மோடி அரசு”.. ராகுல் காந்தி பதிலடி!