Tamilnadu
குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள்.. கடல் அலையில் சிக்கி பரிதாப பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம்!
திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளை அருகே நவ்வலடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராகுல், முகேஷ், ஆகாஷ். இந்த மூன்று சிறுவர்களும் அருகே உள்ள கடற்கரைக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் மாயமாகி உள்ளனர். இதுபற்றி அறிந்த உடனே கடலோர காவல் குழுவினர் மீட்புப் பணி மற்றும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்குச் சபாநாயகர் அப்பாவு இரவு நேரத்திலும் மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார். இரவு முழுவதும் மீட்புப் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலையில் நவ்வலடி அருகே உள்ள கோடாவிளை என்ற இடத்தில் ஆகாஷ் மற்றும் ராகுல் ஆகிய இரண்டு சிறுவர்களின் உடல் கரை ஒதுங்கியது. மேலும் முகேஷின் உடலும் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குளிக்கச் சென்ற மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!