Tamilnadu
சாலையை கடக்க முயன்றபோது நடந்த விபரீதம்.. டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாப பலி!
செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் இருந்து எம்.சாண்ட் மணலை ஏற்றிக் கொண்டு தாம்பரம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது பொத்தேரி சிக்னல் அருகே சாலையை கடக்க இருசக்கர வாகனங்கள் நின்று கொண்டிருந்தனர். அந்நேரம் வேகமாக வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
இதில் ஒரு பெண், இரண்டு கல்லூரி மாணவர்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் உயிரிழந்தவர்கள் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அதேபோல் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தது, பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த கார்த்திக் , யஸ்வந்த் என்ற இரண்டு மாணவர்களும், அதேபகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி, பவானி என்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக நசுங்கி உள்ளது. மேலும் விபத்தை ஏற்படுத்திய விட்டுத் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!