Tamilnadu

#BeTheBetterGuy : தலைநகர் சென்னையில் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஹூண்டாய் நிறுவனம் !

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனந்தமாக உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அதிக கார்களை விற்பனை செய்து ஒவ்வொரு ஆண்டும் சாதனை படைத்தது வருகிறது. மேலும், உலகளவிலும் தங்கள் கார்களை ஏற்றுமதி செய்தும் வருகிறது.

இப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் சாலை விதிமுறைகளை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 5 ஆண்டுகளாக #BeTheBetterGuy ( Buckle up, Young India ) எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தி வருகிறது.

அந்த வகையில், தற்போது கலைஞர் செய்திகள் நிறுவனத்தோடு இணைந்து இந்தாண்டுக்கான #BeTheBetterGuy விழிப்புணர்வு பிரசாரத்தை ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் மேற்கொண்டுள்ளது. அதன்படி, சாலைகளில் நடந்து செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், வாகனங்களில் செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் சாலையில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர சக்கர வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு காவல்துறையினரின் ஒத்துழைப்போடு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது, காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், முறையாக சாலை விதிகளை பின்பற்றாதவர்களிடம் சாலை விதிகளை எடுத்துச்சொல்லி அவற்றை பின்பற்றுவதன் அவசியமும் விளக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது வாகன ஓட்டிகள் சாலை விதிகளை நிச்சயம் பின்பற்றுவோம் என தெரிவித்தனர்.

அதே நேரம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் மற்றும் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி சார்பில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர சக்கர வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "காவல்துறை மீது நம்பிக்கையில்லை, நீங்கள் செல்லவேண்டாம்" -ராணுவ வீரர் காலில் விழும் மணிப்பூர் பெண்கள் !