Tamilnadu
தலையை நோக்கி வீசப்பட்ட அரிவாள்.. தொப்பியில் பட்டு தப்பித்த உயிர்: போலிஸ் நடத்திய என்கவுண்டர் -முழு விவரம்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே ஊரப்பாக்கத்தில் காரணை - புதுச்சேரி செல்லும் பிரதான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவல்துறையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே கருப்பு நிற கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது.
அதனை போலீசார் தடுக்க முயன்றபோது, அவர்கள் மீது ஏற்றுவது போல் வந்துள்ளது. இதில் போலீசார் விளக்கிக்கொள்ளவே, அந்த கார் போலீஸ் ஜீப் மோதி மோதி நின்றுள்ளது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் போலீசாரை ஆயுதங்களுடன் தாக்கினர். அப்போது உதவி ஆய்வாளர் மீது அந்த அரிவாள் வெட்டுபட்டது.
மேலும் அவரது தலையை நோக்கி மீண்டும் அரிவாளால் தாக்க முயன்றபோது, அந்த ஆய்வாளர் குனியவே, அவர் தொப்பியில் வெட்டு பட்டது. இதையடுத்து வேறு வழியின்றி போலீசார் 2 ரௌடிகளை சுட்டனர். தொடர்ந்து அங்கிருந்த மீது ரௌடிகள் தப்பித்து ஓடிவிட்டனர். இதையடுத்து துப்பாக்கி சூடுபட்டவர்களை மீட்ட போலீசார் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே அவர்களை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து விசாரிக்கையில், உயிரிழந்த ரௌடிகளின் பெயர் சோட்டா வினோத் (35), ரமேஷ் (32) என்று தெரியவந்தது. மேலும் அதி வினோத் மீது 10 கொலை, 15 கொலை முயற்சி, 10 கூட்டுக்கொள்ளை என 50-க்கும் மேற்பட்ட வழக்குகளும், ரமேஷ் மீது 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி என 20-க்கும் மேற்பட்ட வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.
ரெளடிகளின் தாக்குதலில் வெட்டுப்பட்ட உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் தற்போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"பாஜக வேட்பாளர் தமிழராக, தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?" - திமுக எம்.பி கனிமொழி கேள்வி !
-
“முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
“Timeless TamilNadu” ஆவணப் படத்திற்கு தேசிய விருது! : முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற குழு!
-
மும்பையில் தொடரும் கனமழை... சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து, தாமதம் - விவரம் உள்ளே !
-
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்... இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரை அறிவித்தார் மல்லிகார்ஜுன கார்கே !