Tamilnadu
உறவினர் வீட்டிற்கு சென்றபோது விபரீதம்: கணவன் கண்முன்னே மனைவிக்கு நடந்த கொடூரம்!
சென்னை அடுத்த பல்லாவரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள். இவரது கணவர் சின்னையா தணியார் நிறுவனம் முன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தம்பதியினர் திருமுடிவாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் அனகாபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்த மாடு மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த நாகம்மாள் சாலையில் விழுந்துள்ளார்.
அப்போது எதிரே வந்த தண்ணீர் லாரி நாகம்மாள் மீது ஏறியதில் அவரது தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தன் கண்முன்னே மனைவி உயிரிழந்ததை பார்த்து கணவர் கதறி அழுத காட்சி அங்கு இருந்தவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் உயிரிழந்த நாகம்மாள் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல்... 3 நாட்கள் அரசு பயிற்சி.. விண்ணப்பிப்பது எப்படி?
-
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு பெற்ற முதலீடு ரூ.6.70 லட்சம் கோடி! : ஒன்றிய அரசின் MSME EPC தகவல்!
-
திமுக தலைவராக பொறுப்பேற்று 8-ஆம் ஆண்டு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் இதோ!
-
திமுக ஆட்சியை பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய அரசே தந்துள்ள நெத்தியடி பதில் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!