Tamilnadu
தடுப்புச் சுவர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவரது மனைவி மதுமிதா. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருந்தது. மேலும் அஜித் குமார் குடும்பத்தாருடன் சென்னையில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சொந்த ஊர் செல்வதற்காக அஜித்குமார் குடும்பத்தாருடன் சென்னையில் இருந்து காரில் தேனி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
இவரது கார் கடலூர் மாவட்டம் கோமுகி ஆற்றங்கரை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் கார் தாறுமாறாக ஓடித் தடுப்புச் சுவரில் மோதியுள்ளது. பின்னர் கார் தலைகுப்புற கவிழ்ந்து அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் காரில் வந்த அஜித்குமார், அவரது மனைவி மதுமிதா, மாமியார் தமிழ்ச்செல்வி, ஒரு வயது பெண் குழந்தை என 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் 4 பேரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !
-
‘பி.எட்.’ மற்றும் ‘எம்.எட்.’ பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கை! : விண்ணப்பிப்பதற்கான விவரம் உள்ளே!