Tamilnadu
சென்னை to யாழ்ப்பாணம்.. விமானத்தில் திடீரென மயங்கி விழுந்த பயணி: அடுத்து நடந்தது என்ன?
சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் நகருக்குச் செல்லும் அலையன்ஸ் ஏர் பயணிகள் விமானம், இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்தது புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளுக்கு, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டு இருந்தனர்.
அப்போது இலங்கையைச் சேர்ந்த சிவகஜன்லிட்டி என்ற பெண் பயணி தமிழ்நாட்டில் ஆன்மீக சுற்றுலாவை முடித்துக்கொண்டு சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பாதுகாப்பு சோதனை பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதை அடுத்து விமான நிலைய ஊழியர்கள் மருத்துவக் குழுவினருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பரிசோதனை செய்தபோது பெண் பயணி உயிரிழந்து விட்டது தெரியவந்தது. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் சென்னை விமான நிலைய போலிஸார் அவரை உடலை உடற்கூறு ஆய்விற்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சென்னையில் உள்ள, இலங்கை தூதரக அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவருடைய உடல், இலங்கைக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் பயணி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!