Tamilnadu
சென்னையில் நடு ரோட்டில் பற்றி எரிந்த விலை உயர்ந்த BMW கார்.. பதறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
சென்னை பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி விலை உயர்ந்த BMW காரை பார்த்தசாரதி என்பவர் ஒட்டிச் சென்றுள்ளார். இவர் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே சென்றபோது திடீரென காரின் முன் பகுதியில் புகை வந்துள்ளது.
உடனே பார்த்தசாரதி காரை சாலையோரம் நிறுத்தியுள்ளார். பிறகு காரில் இருந்து இவர் வெளியே வந்த சில நிமிடத்திலேயே கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து பதறியடித்து ஓடியுள்ளனர்.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தாம்பரம் சானடோரியம் தீயணைப்புத் துறைக்கும் மற்றும் போலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
ஆனால் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து காரில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விலை உயர்ந்த கார் தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மோசமான தேசிய நெடுஞ்சாலைகளால் அதிகரிக்கும் விபத்துகள் : நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குற்றச்சாட்டு!
-
கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணை போவது வெட்கக்கேடு : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்