Tamilnadu

”தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வேலைகள் எடுபடாது”.. அமலாக்கத்துறை சோதனைக்கு கே.பாலகிருஷ்ணன் எதிர்ப்பு!

அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை என்பது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், "அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை என்பது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் தற்போது அமலாக்கத்துறை மூக்கை நுழைத்துள்ளது.

மேலும், வழக்குத் தீர்ப்பை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அரசியல் உள்நோக்கத்துடன் ஒன்றிய பா.ஜ.க அரசு அமலாக்கத்துறையை ஏவி விட்டுள்ளது. இது எதிர்கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயலாகும். பா.ஜ.க-வின் வேலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது.

அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளைக் கொண்டு ஊழலை பா.ஜ.க எதிர்கிறது என்பது போன்று கட்டமைக்கப்படுகிறது. ஆனால் எத்தனையோ பா.ஜ.க அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. இவர்கள் மீது இதுவரை நடவடிக்கைகள் எடுக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: ”அமலாக்கத்துறை சோதனைகளை கண்டு தி.மு.க கிஞ்சிற்றும் கவலைப்படாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!