Tamilnadu
”அமலாக்கத்துறை சோதனைகளை கண்டு தி.மு.க கிஞ்சிற்றும் கவலைப்படாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. முதற்கட்டமாக ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகள் ஒற்றுமையுடன் நாடாளுமன்ற தேர்தலைச் சந்திப்பது என அனைத்து கட்சித் தலைவர்களும் பேசியுள்ளனர். மேலும் ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இதையடுத்து எதிர்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நாளை பெங்களூருவில் நடைபெறுகிறது.இதில் 24 எதிர்கட்சிகள் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எதிர்கட்சிகளின் கூட்டம் பா.ஜ.கவுக்கு மிகப் பெரிய எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனுடைய வெளிப்பாடுதான் அமலாக்கத்துறை சோதனை. வடமாநிலங்களின் செய்ததுபோல் இப்போது தமிழ்நாட்டிலும் செய்கிறது பா.ஜ.க இந்த சோதனைகளை கண்டு எல்லாம் பா.ஜ.க கிஞ்சிற்றும் கவலைப்படாது.
13 ஆண்டுகளுக்கு முன்பு அம்மையார் ஜெயலலிதா தொடுத்த பொய் வழக்கில் தற்போது சோதனை நடத்தப்படுகிறது. 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியிலிருந்தது. அப்போது எல்லாம் விட்டுவிட்டு இப்போது வந்து சோதனை செய்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் வர இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் இதற்கு எல்லாம் மக்கள் பதில் சொல்லத் தயாராகி விட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!