Tamilnadu
'ரூ.10 ஆயிரம் கொடு'.. விவசாயியிடம் மாமூல் கேட்ட பா.ஜ.க நிர்வாகி - கைது செய்த போலிஸ்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் அடுத்த தும்மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் தியாகதுருவம் பேருந்து நிலையம் அருகே தனக்குச் சொந்தமான இடத்தில் கடை ஒன்றை கட்டி வருகிறார்.
அதேபோல் தியாகதுருவம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத பாண்டியன். இவர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க தலைவராக உள்ளார். இவர் ஏழுமலையிடம் இங்குக் கடை கட்ட வேண்டும் என்றால் எனக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இதற்கு ஏழுமலை, எனது சொந்த இடத்தில் நான் கடை கட்டுவதற்கு உங்களுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டு காசு எல்லாம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகுநாத பாண்டியன், ஏழுமலையைத் தாக்கி அவரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
இதையடுத்து ஏழுமலை இது குறித்து தியாகதுருவம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து பா.ஜ.க நிர்வாகி ரகுநாத பாண்டியனை போலிஸார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தியாகதுருவம் பகுதியில் விவசாயி கடை கட்டுவதற்கு மாமூல் கேட்டு பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!