Tamilnadu
திருமணம் நடந்த 10 நாளில்.. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு: அதிர்ச்சியில் உறவினர்கள்!
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வி.ஜி.ஆர்.கண்டிகை காலனியைச் சேர்ந்தவர் முத்து. இவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த பி.எஸ்.சி படித்து முடித்த அனு என்ற பெண்ணுடன் கடந்த 29-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று இரவு கணவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அனு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இந்த தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கணவன் தினமும் குடித்துவிட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அனு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட
மேலும் புதுமணப் பெண் தற்கொலை சம்பவம் தொடர்பாக திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணமான 10 நாட்களில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!
-
திமுக தலைவர் வெளியிட்ட வீடியோ.. தாராபுரம் தொகுதி வாக்காளர்களே.. உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்!
-
“த.வெ.க தூய சக்தி அல்ல; துயர சக்தி” : மதுராந்தகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!