Tamilnadu
ரயில் சக்கரத்தில் நசுங்கி வாலிபர் பரிதாப பலி.. மதுராந்தகத்தில் சோகம்.. நடந்தது என்ன?
புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு நாள்தோறும் இரயில்கள் செல்கின்றன. அந்த வகையில் இன்று இரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சூழலில் அதில் பயணம் செய்த பயணி ஒருவர் தாகமாக இருக்கிறது என்று தண்ணீர் பிடிக்க எண்ணியுள்ளார். இந்த நிலையில் அவர் வந்த இரயில் மதுராந்தகம் இரயில் நிலையத்தில் நின்றது.
எனவே இரயிலில் இருந்து இறங்கி தனது கேனில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இரயில் செல்லவே, இதனை கண்டதும் ஓடிப்போய் இரயிலை பிடிக்க முயன்றார். அப்போது அவரது கால் இடறி கீழே விழுந்த அவர், ஓடும் இரயிலின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து இரயில்வே போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் உடலை மீட்டு, அந்த நபர் யார், என்ன ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் இரயிலில் ஏற சென்ற பயணி ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”விடுபட்டவர்களுக்கும் ரூ.1,000 கிடைக்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
-
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, ‘உலக புத்தொழில் மாநாடு 2025’! : எங்கு? எப்போது?
-
பஞ்சாப் மழை வெள்ளம்! : 3.87 லட்சம் பேர் பாதிப்பு - உயிரிழப்பு 51ஆக உயர்வு!
-
”பா.ஜ.கவின் பொருளாதாரச் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது” : வெளுத்து வாங்கிய முரசொலி!
-
தமிழ்நாட்டில் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை : போட்டி அட்டவணையை வெளியிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி!