Tamilnadu
மகன் இறப்புச் செய்தியைக் கேட்டு தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு.. குடும்பத்தை உலுக்கிய சோக சம்பவம்!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பாலவேடு - காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் அசோக்குமார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் அசோக்குமார் கடந்த 2ம் தேதி நண்பரை சந்திப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பாக்கம் பகுதியில் சென்றபோது அதிவேகமாக வந்த கார் ஒன்று இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதில் அசோக் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அசோக்குமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் குறித்து அவரது தந்தைக்குத் தெரிவித்துள்ளனர். மகன் இறப்புச் செய்தியைக் கேட்டு மாரடைப்பால் தந்தை குப்பன் உயிரிழந்தார். தந்தையும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் : எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
-
“சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
குட் பேட் அக்லி - இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை : உயர்நீதிமன்ற உத்தரவு!
-
பா.ஜ.கவில் இருந்து விலகிய முக்கிய தலைவர் : புதுச்சேரி அரசியல் வட்டத்தில் பரபரப்பு!