Tamilnadu
எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான கல்லூரியில் விபத்து .. 5 தொழிலாளர்கள் பலி: போலிஸ் விசாரணை!
கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரத்தில் ஸ்ரீ கிருஷ்ணா என்ற கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் தலைவராக மலர்விழி என்பவர் உள்ளார். இக்கல்லூரியை சுற்றி பிரம்மாண்ட சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுற்றுச்சுவர் கட்டும்போதே இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் வெளிமாநிலத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் விபத்து எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்தும், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும், விபத்திற்கான காரணத்தை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
இந்நிலையில், விபத்து நடந்த இந்த கல்லூரியின் பெரும்பாலான பகுதிகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்தே கட்டப்பட்டுள்ளது. இதற்கு கடந்த காலங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டபோதும், அன்றைய அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி வேலுமணி கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். மேலும் இக்கல்லூரியின் பங்குதாரராக அவர் உள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து மூன்று பேர் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
ரூ.265.50 கோடி : 9371 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
டித்வா புயலால் பாதித்த இலங்கை : 950 மெட்ரிக் டன் நிவாரண பொருட்களை அனுப்பிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!