Tamilnadu

அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி: அண்ணன்-அண்ணி மீது போலி புகார்:அதிமுக பிரமுகரின் தம்பி கைது

விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் விஜய நல்லதம்பி. அதிமுகவை சேர்ந்த இவருக்கு ரவிச்சந்திரன் என்ற அண்ணன் உள்ளார். அதிமுகவின் விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ரவிச்சந்திரனுக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த சூழலில் அவர் தனியார் பல்கலை.,யில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் துணை வேந்தராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த சூழலில் விஜய நல்லதம்பி, தனது அண்ணன் - அண்ணி மீது காவல்துறையில் கடந்த 2022-ம் ஆண்டு போலீசில் பண மோசடி புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் தனது அண்ணன் ரவிச்சந்திரன் மற்றும் அண்ணி வள்ளி ஆகியோர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் சுமார் 1.80 கோடி வரை மோசடி செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல பெண்கள், ஆண்களிடம் உதவிப் பேராசிரியர், பேராசிரியர் பணிக்காக லட்சக் கணக்கில் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து ரவிசந்திரன், விஜய நல்லதம்பி மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

அதாவது, அந்த 20 பேரிடமும் பணத்தை பெற்றுக்கொண்டது அண்ணன் ரவிசந்திரன் இல்லை என்றும், புகார் கொடுத்த விஜய நல்லத்தம்பி என்றும் தெரியவந்தது. மேலும் அவரே பணத்தை பெற்றுக்கொண்டு தனது அண்ணன் - அண்ணி மீது போலியான புகார் கொடுத்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து போலி புகார் கொடுத்த விஜய நல்லதம்பியை போலிசார் கைது செய்தனர்.

Also Read: ”BJPக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுக உறுதி”: The Hindu நாளிதழுக்கு முதலமைச்சர் அளித்த முழு பேட்டி இங்கே!